போர் ஒப்பந்தம் கையெழுத்தானது. 
உலகம்

அமெரிக்கா-ஈரான்: 14 அம்ச ஒப்பந்தம் கையெழுத்தானது!

Staff Writer

அமெரிக்கா-ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம் 14 அம்சங்களுடன் கையெழுத்தானது.

இதனால், கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கிய இரு நாடுகளுக்கும் இடையில் தொடங்கிய போர் அதிகாரபூர்வமாக நிறுத்தப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் ஆகியோர் அமைதி ஒப்பந்தத்தில் டிஜிட்டல் முறையில் கையெழுத்திட்டுள்ளனர்.

போர் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள 14 அம்சங்கள் :

1. லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும் நிரந்தரமாகவும் முடிவுக்குக் கொண்டுவருவதாக இரு நாடுகளும் அறிவிக்கின்றன.

2. இருநாடுகளின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை மதிக்கவும், ஒன்றின் உள் விவகாரங்களில் மற்றொன்று தலையிடாமல் இருக்கவும் உறுதியளிக்கின்றன.

3. அமெரிக்க ஐக்கிய நாடுகளும் ஈரான் இஸ்லாமியக் குடியரசும், அதிகபட்சம் 60 நாட்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு உறுதியளிக்கின்றன.

4. 30 நாள்களுக்குள், ஈரானின் அருகிலிருந்து தனது படைகளை விலக்கிக்கொள்வதாகவும், கடற்படை முற்றுகைகளை நிறுத்திக்கொள்வதாகவும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் உறுதியளிக்கிறது.

5. வர்த்தகக் கப்பல்களின் போக்குவரத்து உடனடியாகத் தொடங்கத் தேவையான முயற்சிகளை முன்னெடுக்கும்.

6. ஈரானின் புனரமைப்பு, பொருளாதார மேம்பாட்டிற்காக, குறைந்தபட்சம் 300 பில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்படும்.

7. ஒப்புக்கொள்ளப்பட்ட கால அட்டவணையில், ஈரானுக்கு எதிரான அனைத்து வகையான தடைகளையும், அதாவது ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைத் தீர்மானங்கள், அனைத்து ஒருதலைப்பட்சமான, முதன்மை-இரண்டாம் நிலைத் தடைகள் உட்பட அனைத்தையும் முடிவுக்குக் கொண்டுவருவதாக அமெரிக்க ஐக்கிய நாடுகள் உறுதியளிக்கிறது. 

8. ஈரான் இஸ்லாமியக் குடியரசு, அணு ஆயுதங்களைக் கொள்முதல் செய்யவோ அல்லது உருவாக்கவோ மாட்டோம் என்பதை உறுதிப்படுத்துகிறது. 

9. இறுதி ஒப்பந்தம் எட்டப்படும் வரை, அமெரிக்காவும் ஈரானும் தற்போதைய நிலையையே கடைபிடிக்கும். ஈரான், அமெரிக்காவில் உள்ள தனது அணுசக்தித் திட்டத்தின் தற்போதைய நிலையையே பராமரிக்கும், எந்தவொரு புதிய தடைகளையும் எதிர்க்காது, மேலும் அப்பகுதியில் கூடுதல் படைகளை நிலைநிறுத்தாது.

10. ஈரானிய கச்சா எண்ணெய், பெட்ரோலியப் பொருட்கள், அவற்றின் வழிப்பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்கும், வங்கிப் பரிவர்த்தனைகள், காப்பீடுகள், போக்குவரத்து போன்றவை உட்பட அதனுடன் தொடர்புடைய அனைத்து சேவைகளுக்கும் அமெரிக்க கருவூலத் துறை விலக்குகளை வழங்கும் என்று அமெரிக்கா உறுதியளிக்கிறது.

11. ஈரானின் முடக்கப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்ட நிதிகள், சொத்துக்களை முழுமையாகப் பயன்பாட்டிற்குக் கிடைக்கச் செய்வதாக அமெரிக்கா உறுதியளிக்கிறது.

12. இரு நாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கண்காணிக்க ஒரு நிர்வாகக் குழு அமைக்கப்படும்.

13. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்தான அனைத்து நடவடிக்கைகளைம் இரு நாடுகளும் செயல்படுத்தத் தொடங்கும்.

14. இறுதி ஒப்பந்தமானது, ஐ.நா. பாதுகாப்புச் சபைத் தீர்மானம் ஒன்றின் மூலம் அங்கீகரிக்கப்படும்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram