எபோலா வைரஸ் 
உலகம்

ஹைதராபாத்தில் ஒருவருக்கு எபோலா வைரஸ் அறிகுறி!

Staff Writer

ஹைதராபாத்தில் எபோலா வைரஸ் அறிகுறிகள் தென்பட்ட சூடான் நாட்டைச் சேர்ந்தவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

ஆப்ரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் பரவி வரும் நிலையில், விமான நிலைய சுகாதாரத் துறை அனைத்து சர்வதேச பயணிகளையும் பரிசோதனை செய்து வருகிறது.

சூடான் நாட்டைச் சேர்ந்த இந்த நபர் தெற்கு சூடான், உகாண்டா வழியாக ஹைதராபாத் ராஜீவ் காந்தி விமான நிலையத்திற்கு வந்தபோது, அவருக்கு எபோலா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

எபோலா வைரஸ் தொற்றின் பொதுவான அறிகுறிகள் காய்ச்சல், கடுமையான தசை வலி, தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படும். கடைசிக் கட்ட அறிகுறிகளாக உள், வெளிப்புற ரத்தக்கசிவு, மார்பு வலி, மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை ஏற்படலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram