உலகம்

அமெரிக்காவுடன் இணைய தயார்... 3 நாடுகள் கூட்டறிக்கை!

Staff Writer

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து களம்காண தயாராகயிருப்பதாக பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன.

மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மூன்று நாடுகளும் தங்கள் சொந்த நலன்களையும் தங்கள் நட்பு நாடுகளின் நலன்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளன.

ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவுவதற்கான, ஈரானின் திறனைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகள் இதில் அடங்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர்ப் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஒப்புக் கொண்டதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.