சனே தகைச்சி 
உலகம்

ஜப்பானில் முதல் பெண் பிரதமர்!

Staff Writer

ஜப்பானின் முதல் பெண் பிரதமராக 64 வயதான சனே தகைச்சி (Sanae Takaichi) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஜப்பானில் ஆளும் தராளவாத ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை இழந்ததை அடுத்து, பிரதமர் ஷிகெரு இஷிபா தமது பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார்.

அதன் பின்னர், அக்கட்சியின் புதிய தலைவராக அமைச்சர் சனே தகைச்சி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையடுத்து, அவர் பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே சனே தகைச்சி பிரதமர் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளா.

புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு ஜப்பான் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. கீழவையில் மொத்தம் உள்ள 465 வாக்குகளில் 237 வாக்குகளைப் பெற்று சனே தகைச்சி வெற்றி பெற்றார்.

இதையடுத்து, அவர் மேலவையில் நடத்தப்படும் வாக்கெடுப்பிலும் வெற்றி பெறும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதால் ஜப்பானின் புதிய பிரதமராக ஏற்றுக் கொள்ளப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் ஜப்பான் நாட்டின் 104வது பிரதமராக அவர் பதவி ஏற்க இருக்கிறார்.

இதன் மூலம் ஜப்பான் அரசியல் வரலாற்றில் பதவியேற்க உள்ள முதல் பெண் பிரதமர் என்ற பெயரையும், பெருமையையும் சனே தகைச்சி பெறுகிறார்.

ஜப்பானின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்படும் தகைச்சி, மறைந்த பிரிட்டிஷ் பிரதமர் மார்கெரட் தாட்சரை தமது ரோல் மாடலாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.