செளதியின் கப்பல்களை திசை திருப்பிவிடும் ஹெளதி 
உலகம்

8 சவுதி கப்பல்களைத் தாக்கி திருப்பிவிட ஹெளதி கிளர்ச்சிப் படை!

Staff Writer

சவுதி அரேபியாவின் எண்ணெய்க் கப்பல்களை வழிமறித்து, திசைதிருப்பியதாக யேமனின் ஹெளதி கிளர்ச்சிப் படை அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பதிலளிக்கும் வகையில், வளைகுடா நாடுகளில் உள்ள முக்கிய கட்டமைப்புகளை ஈரானிய படைகள் தாக்கி வருகின்றன. இந்நிலையில், ஈரானுக்கு ஆதரவளிக்க யேமனின் ஹெளதி படை களமிறங்கியுள்ளது.

பாப் அல்-மண்டப் நீரிணையை ஈரானின் ஆதரவு பெற்ற ஹெளதிகள் கட்டுப்படுத்தி வருகின்றனர்.

கடந்த சில நாள்களுக்கு முன்னர், இந்த நீரிணையைக் கடக்க முயன்ற சவுதி அரேபியாவின் எண்ணெய்க் கப்பல்கள் மீது ஹெளதி தாக்குதல் நடத்தியது.

இதைத் தொடர்ந்து, சவுதி அரேபியா, அமெரிக்கப் படைகள் இணைந்து ஈராக்கில் செயல்பட்டுவரும் ஆயுதப்படைகள் மீது தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில், சவுதி அரேபியாவின் 8 எண்ணெய்க் கப்பல்களை வழிமறித்து, திசைதிருப்பி அனுப்பியதாக, ஹெளதி கிளர்ச்சிப் படையின் செய்தியாளர் யஹ்யா சரீ தெரிவித்துள்ளார்.

பாப் அல்-மண்டப் நீரிணை வழியாக கடந்த ஜூலை 20 முதல் சவுதி அரேபியாவின் கப்பல்கள் செல்ல, ஹெளதிகள் தடை விதித்துள்ள நிலையில், சவுதி அரேபியாவிற்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுவோம் என்று ஹெளதியின் கிளர்ச்சிப் படை அறிவித்துள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram