டைம் 100 பட்டியலில் ஸ்மிருதி மந்தனா இடம்பெற்றுள்ளார். 
உலகம்

டைம் 100 பட்டியலில் ஸ்மிருதி மந்தனா!

Staff Writer

டைம் இதழின் 2026-ஆம் ஆண்டுக்கான மிகவும் செல்வாக்கு மிகுந்த 100 விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியர் ஸ்மிருதி மந்தனா ஆவார்.

டைம் 100 என்பது அமெரிக்காவின் புகழ்பெற்ற டைம் இதழ், ஆண்டுதோறும் வெளியிடும் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலாகும்.

அரசியல், கலை, வணிகம், அறிவியல், சமூக சேவை, விளையாட்டு போன்ற துறைகளில் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் 100 நபர்களை வரிசைப்படுத்தி பட்டியலை வெளியிடுகிறது.

மும்பையில் பிறந்த ஸ்மிருதி மந்தனா தொடக்க ஆட்டக்காரராக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் விளையாடி வருகிறார். அவரின் அபாரமான வளர்ச்சியை டைம் இதழ் பாராட்டி, பட்டியலில் 29ஆவது இடத்தைப் பிடித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

இவர் உள்நாட்டு ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

மேலும், மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் 17 சதங்களுடன் அதிக சதங்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்; ஒரு வருடத்தில் 1,000 ஒரு நாள் சர்வதேச ரன்களைக் கடந்த முதல் பெண்மணியும் இவரே ஆவார்.

ஸ்மிருதி மந்தனாவின் சீரான, சிறப்பான ஆட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதாக டைம் இதழ் குறிப்பிட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram