இலக்கிய நோபல் பரிசு பெறும் ஆனி கார்சன் 
உலகம்

கனடிய எழுத்தாளருக்கு இலக்கிய நோபல்!

Staff Writer

இலக்கியத்துக்கான இந்த ஆண்டு நோபல் பரிசு கனடிய எழுத்தாளர் ஆனி கார்சனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

செவ்வியல் மரபுடன் இணக்கமான உரையாடலில் ஈடுபட்டு, சமகால இலக்கியத்திற்குப் புதிய வடிவங்களை உருவாக்கியுள்ள அவரது துணிச்சலான, புத்தாக்கம் மிக்க படைப்புகளுக்காக விருது வழங்கப்படுவதாக நோபல் குழு தெரிவித்துள்ளது.

கனடாவின் டொரண்டோவில் 1950இல் பிறந்த இவர், 81ஆம் ஆண்டில் தன் முனைவர் பட்ட ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டு, பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். கல்விப்பணி நெடுகிலும் அவர் கவிதைகளைப் படைப்பதும் மொழிபெயர்ப்புகளைச் செய்வதுமாக இருந்துவருகிறார்.

அவருடைய இலக்கியப் படைப்புகள் அனைத்தும், சொற்கள் மீதான மொழியியலாளரின் தீராத ஈடுபாட்டிற்கும் புதிய அர்த்தத்திற்கான கவிஞரின் தேடலுக்கும் இடையிலான புள்ளியை மையமாகக் கொண்டபடியே அமைந்துள்ளன.

ஆனாலும், இவரின் தொடக்கம் வேர்ச்சொல் ஆய்வாகவே அடையாளம் காணப்பட்டுள்ளது.

கிரேக்க மொழிப் படைப்புகள் பலவற்றையும் மொழிபெயர்த்துள்ளார்.

இவ்வாறு நோபல் குழுவின் சார்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.