கிழக்கு ஆசியப் பகுதியான திபெத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 16 பேர் பலியாகியுள்ளனர்.
நேற்றிரவு 10.33 மணியளவில் திபெத்தின் நாகு நகரில் உள்ள பாகென் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளதாகவும், பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாகவும் அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்த 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் ஏராளமானோர் இடுபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஐந்து ஆண்டுகளில் உருவான மிகப்பெரிய நிலநடுக்கம் இதுதான் என்று சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 413 முறை அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக சீன நிலநடுக்க வலையமைப்பு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடுத்த மூன்று நாள்களுக்கு விட்டுவிட்டு பனிப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட வாய்ப்பிருப்பதாக சீனாவின் அரசு செய்தி நிறுவனமான சின்ஹூவா செய்தி நிறுவனம் கூறியுள்ளது.