உலகம்

வெனிசுலா துணை அதிபருக்கும் டிரம்ப் மிரட்டல்!

Staff Writer

வெனிசுலா அதிபர் மதுரோவையும் அவரின் மனைவியையும் அவர்கள் நாட்டுக்குள் புகுந்து அத்துமீறி கடத்திச் சென்றது, அமெரிக்கா. அதற்கு உலக அளவில் பரவலாக கண்டனங்கள் எழுந்துள்ளதுடன் அமெரிக்காவிலும் எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்துவருகின்றன.

நியூயார்க் நகர புதிய மேயர் சொரான் மஸ்தானி டிரம்பின் இந்த நடவடிக்கையைக் கண்டித்துள்ளார்.

அமெரிக்க முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ், டிரம்பின் இந்த முடிவால் ஏற்கெனவே உலக நடவடிக்கையால் அவதிப்படும் உள்நாட்டு மக்களுக்கு மேலும் துன்பத்தையே தரும் என விமர்சித்துள்ளார்.

ஆனாலும், இன்று மீண்டும் வெனிசுலாவுடன் மோதலைத் தீவிரப்படுத்தியிருக்கிறார், டிரம்ப்.

அந்நாட்டின் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றுள்ள டெல்சி ரோட்ரிக்ஸ், தங்கள் நாட்டின் இறையாண்மையையும் வளங்களையும் பாதுகாக்கும் உரிமையைப் பாதுகாக்க உள்ளதாகத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அதையடுத்தே, இன்று அவர் அமெரிக்காவின் எதிர்பார்ப்புக்கு ஒத்துழைக்காவிட்டால் மதுரோவைவிட அதிகமான விலையைக் கொடுக்கவேண்டி இருக்கும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.