வெள்ளை மாளிகைக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டிருந்த மூன்று செய்தி நிறுவனங்களுக்கு, அனுமதி வழங்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேர்மையற்ற முறையில் பொய்யான செய்திகளை வெளியிடுவதாகக் குற்றஞ்சாட்டி, சி.என்.என்., பொலிடிகோ, எம்.எஸ். நவ் ஆகிய 3 மூன்று செய்தி நிறுவனங்கள் வெள்ளை மாளிகைக்குள் நுழையக் கூடாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.
இந்தத் தடை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்த மூன்று செய்தி நிறுவனங்களும் இணைந்து அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
மேலும், ஊடகங்களுக்கு எதிராக டிரம்பின் நடவடிக்கைகள் இருப்பதால், அமெரிக்காவின் முன்னணி செய்தி நிறுவனங்கள் அதிபர் டிரம்ப் தொடர்பான செய்திகளின் ஒளிபரப்பை நிறுத்துவதாக அறிவித்தன.
இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மூன்று ஊடக நிறுவனங்கள் மீதான அமெரிக்க அதிபரின் தடை உத்தரவு அரசியலமைப்புக்கு முரணாக இருப்பதாகவும், தடை உத்தரவை அமெரிக்க அதிபர் நீக்க வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.