டொனால்ட் டிரம்ப் 
உலகம்

ரஷ்யா, ஈரான் மீது தடை ரத்து - டிரம்ப் திடீர் அறிவிப்பு!

Staff Writer

ரசியாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்யும் நாடுகளின் மீது 100% வரி விதிக்கும் சட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரசியாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் இந்தியா, சீனா உட்பட்ட நாடுகள் மீது 100% வரி விதிக்கும் மசோதா அண்மையில் அமெரிக்க நாடாளுமன்ற மேலவை ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், இந்தச் சட்டம் வரும் அக்டோபர் 18ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்மூலம், ரசியா மீது கடுமையான தடைகளை விதிக்கவும், ரசியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா உட்பட்ட உலகின் மிகப்பெரிய நாடுகளின் மீது இந்த சுங்கவரி விதிக்க அமெரிக்கா முடிவு செய்திருந்தது.

இந்நிலையில், அமெரிக்காவின் தேசிய நலனைக் கருத்தில் கொண்டு, 'ரசியா, ஈரான் மீதான தடைகள் சட்டத்தின்' கீழ் விதிக்கப்பட்டிருந்த எண்ணெய், எரிவாயு கொள்முதல் மீதான தடைகள், சுங்க வரிகளை ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram