பள்ளி மாணவர்கள் ஏஐ பயன்படுத்த தடை 
உலகம்

8ஆம் வகுப்புவரை பள்ளி மாணவர்கள் ஏஐ பயன்படுத்தத் தடை!

Staff Writer

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் ஏஐ பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகர பொதுப் பள்ளிகளில் இந்தப் புதிய கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளதாக நியூயார்க் நகர மேயர் சோரன் மம்தானி தெரிவித்துள்ளார்.

ஆரம்பக் கல்வி பயிலும் குழந்தைகள் முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள்வரை ஓராண்டு ஏஐ பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு குறித்து மேயர் சோஹ்ரான் மம்தானி கூறுயதாவது:

"குழந்தைகள் கற்றுக்கொள்ளவும் வளரவும் ஆசிரியர்கள், நண்பர்கள், நேரடி மனிதத் தொடர்பு அவசியம்.

ஆரம்பக் கல்வியில் ஏ.ஐ. தவிர்க்க முடியாததும் அவசியமானதுமாக தொழில்நுட்ப நிறுவனங்கள் கூறுவதை நியூயார்க் நகர நிர்வாகம் ஏற்கவில்லை.

குழந்தைகள் ஏஐ தொழில்நுட்பங்களைச் சார்ந்து செயல்படுவதாக நாங்கள் உணர்கிறோம். குழந்தைகள் மீது, இந்த ஏஐ தொழில்நுட்பத்தின் தாக்கத்தை ஆய்வு செய்யவே இந்த தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒன்பதாம் வகுப்பு முதல் உயர்நிலைப் பள்ளி வரை பயிலும் மாணவர்களுக்கு ஏஐ முழுமையாகத் தடை செய்யப்படவில்லை. மாறாக, அதன் பயன்பாடு,  நன்மைகள், தீமைகள் குறித்து வகுப்புகள் நடத்தப்பட உள்ளன." என்று மம்தானி தெரிவித்தார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram