மகளிர் டி20 உலகக் கோப்பை  
உலகம்

மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஆஸ்திரேலிய அணி!

Staff Writer

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.

இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை ஆஸ்திரேலியா அணி வீழ்த்தி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது.

126 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணி 13 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

தொடக்க வீராங்கனையான ஆஸ்திரேலிய அணியின் பெத் மூனி ஆட்டமிழக்காமல் 61 ரன்கள் குவித்தார்.

ஆஸ்திரேலிய அணியின் ஆஷ்லி கார்டனர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன், 35 ரன்கள் எடுத்து தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக ஆட்டநாயகி விருதை வென்றார்.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி தனது எட்டாவது மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

இறுதிப்போட்டியில் இங்கிலாந்து–தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான இரண்டாவது அரையிறுதியில் வெற்றி பெறும் அணியை ஆஸ்திரேலியா அணி எதிர்கொள்ள உள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram