இங்கிலாந்தில் நடந்துவரும் மகளிர் டி20 உலகக்கோப்பைப் போட்டியில், பாகிஸ்தானை இந்திய அணி வீழ்த்தியது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா ஆகியோர் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 68 ரன்களையும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 36 ரன்களையும் குவித்தனர். ஆட்ட முடிவில், 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களை இந்திய அணி குவித்தது.
சவாலான இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, இந்தியாவின் பந்து வீச்சில் திணறியது. இதனால், 106 ரன்களை மட்டுமே எடுத்து 17 ஓவரில் ஆல் அவுட் ஆனது.
இந்திய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதுமட்டுமின்றி, தீப்தி சர்மாவின் அசத்தலான ஆப்-ஸ்பின் பந்துவீச்சால் அவரது 4 ஓவர்களில் 10 ரன்களை மட்டுமே பாகிஸ்தான் அணி எடுத்தது. மேலும், அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய வீராங்கனை ஆனார்.