யூடியூப் 
உலகம்

அதிர்ச்சி தந்த யூட்டியூப்... 2027 பிப்ரவரி முதல் புதிய நிபந்தனைகள்!

Staff Writer

யூட்டியூப்பில் படைப்புகளை வெளியிடும் எண்ணம் கொண்டவரா நீங்கள்... கொஞ்சம் மனதைத் திடப்படுத்திக்கொள்ளுங்கள்!

அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது, கூகுளின் யூட்டியூப் நிறுவனம்!

இதில் வருமானம் ஈட்டுவதற்கான தகுதி வரம்பை இரட்டிப்பாக ஆக்கியுள்ளது யூட்டியூப் நிறுவனம்.

இதுவரை ஒரு யூட்டியூப் சேனலில் வருமானம் ஈட்டும் தகுதியைப் பெற, 12 மாதங்களில் 4,000 மணி நேரப் பார்வைகளைப் பெற்றிருக்க வேண்டும் அல்லது 90 நாள்களில் 1 கோடி பார்வைகளை எட்டியிருக்க வேண்டும் என்பதாகும்.

புதிய அறிவிப்பின்படி, இனி புதிதாக உருவாகும் யூட்டியூப் சேனல்கள் வருமானம் ஈட்ட 12 மாதங்களில் 8,000 மணி நேரப் பார்வையைப் பெற்றிருக்க வேண்டும் அல்லது 90 நாள்களில் 2 கோடி பார்வைகளை எட்டியிருக்க வேண்டும்.

இருப்பினும், வருமானம் ஈட்டுவதற்கான தகுதியைப் பெறத் தேவையான சந்தாதாரர்களின் எண்ணிக்கையான ஆயிரத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நிபந்தனைகள் வரும் 2027ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram