அண்ணாமலை - சீமான் 
செய்திகள்

"பைட் பண்ணிட்டே இருங்கண்ணா... விட்றாதீங்கண்ணா" – சீமானுக்கு தைரியம் கொடுத்த அண்ணாமலை!

Staff Writer

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, சீமானுக்கு தைரியம் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியிலிருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறி வருவது, நடிகை கொடுத்த பாலியல் புகார் என சீமான் அடுத்தடுத்து சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் நேற்று சீமானை சந்தித்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அவருக்கு தைரியம் கூறியுள்ளார்.

பா.ஜ.க. நிர்வாகியின் இல்ல திருமண நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அங்கு வந்த சீமானை சந்தித்தார். காரில் அமர்ந்திருந்த சீமானுக்கு கைகொடுத்த அண்ணாமலை, எப்படிண்ணா இருக்கீங்க? என்று கேட்டார். அதற்கு சீமான் நலமாக இருக்கிறேன் என்று கூறினார்.

தொடர்ந்து அண்ணாமலை, "பைட் பண்ணிட்டே இருங்கண்ணா... ஸ்ட்ராங்கா இருங்கண்ணா... விட்றாதீங்கண்ணா" என்று கூறிவிட்டுச் சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி பேசுபொருளாகி வருகிறது.