தனது மனையுடன் யூடியூபர் இர்பான் 
செய்திகள்

அசிங்கமா இல்லையா…? மீண்டும் சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் இர்பான்…

Staff Writer

பிரபல யூ டியூபர் இர்பான் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில், இணையவாசிகள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பிரபல யூடியூபர் இர்பான் முதன்முதலாக தன்னுடைய குழந்தையின் பாலினத்தை தெரிவித்தது, பின்னர் குழந்தை பிறப்பின் போது தொப்புள் கொடியை வெட்டியது போன்ற அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கினார். இதற்கு மன்னிப்பும் கேட்டார்.

இந்த நிலையில், ரம்ஜான் தினமான நேற்று இவர் தன்னுடைய குடும்பத்தோடு காரில் சென்று இல்லாதவர்களுக்கு உணவை வழங்கியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒருவர் உணவை பறித்து வாங்கியதாக கூறப்படுகிறது. இதற்கு இர்பான் அசிங்கமாக இல்லையா? இப்படியா வாங்குவிங்க? கொஞ்சம் கூட கூச்சமே இல்லையா? என்று திட்டியுள்ளார்.

இதை அவர் வீடியோக எடுத்து தன்னுடைய யூடியூப் சேனலில் போட்டுள்ளார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏழைகளுக்கு உதவி செய்ய நினைப்பர் இப்படியா வீடியோ எடுப்பது? பாசியோடு இருக்கும் மக்களை இப்படியா கேவலப்படுத்துவது என பலரும் விமர்சித்து வருகின்றனர்.