செய்திகள்

அண்ணாமலை அ.தி.மு.க.வைச் சொல்லவில்லை- எடப்பாடி பழனிசாமி

Staff Writer

பா.ஜ.க. கூட்டணிக்காக தவம் கிடக்கிறார்கள் என அ.தி.மு.க.வை அண்ணாமலை சொல்லவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். 

கோவையில் அண்ணாமலை அவ்வாறு கூறியதைப் பற்றி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் இன்று செய்தியாளர்கள் கேட்டனர். உடனே அவர், அ.தி.மு.க.வை அவர் குறிப்பிட்டாரா, தவறாப் பேசாதீங்க என்றார்.

எங்கே யார் சொன்னது என அவர் எதிர்க்கேள்வி கேட்டார். 

மீண்டும், அண்ணாமலைதான் இப்படிக் கூறியிருக்கிறாரே எனக் கேட்டதற்கு, “ எங்கே அப்படி யார் சொன்னது. நீங்க போட்டுக்கொடுத்து வாங்காதீங்க. நான் ஏற்கெனவே தெளிவாகச் சொல்லிவிட்டேன், ஆறு மாதம் கழித்துதான் கூட்டணி பற்றித் தெரியுமென்று...” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.