சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு 
செய்திகள்

அ.தி.மு.க. ஆதாரம் தந்தது... ஸ்டாலின் சொன்னதுதான் உண்மை: அப்பாவு

Staff Writer

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக எப்போது வழக்கு பதியப்பட்டது என்பதைப் பற்றிய ஆதாரங்களை சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவிடம் அ.தி.மு.க. சார்பில் இன்று வழங்கப்பட்டது. 

முன்னதாக, பேரவையில் நடைபெற்ற விவாதத்தில், பொள்ளாச்சி வன்கொடுமை நடந்து 12 நாள்களுக்குப் பிறகே வழக்கு பதியப்பட்டது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். அதை மறுத்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதுகுறித்த ஆவணங்களைத் தருவதாகத் தெரிவித்திருந்தார்.  

அதன்படி, அவைத்தலைவரிடம் அக்கட்சியின் சார்பில் அவரிடம் இன்று வழங்கினார்கள். அதைப் பெற்றுக்கொண்ட அவைத்தலைவர், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் கூறியதே சரி எனத் தீர்ப்பு கூறினார். 

அ.தி.மு.க. தரப்புத் தகவலின்படி, பொள்ளாச்சியில் பாலியம் கொடுமை குறித்து 2019 பிப்ரவரி 24ஆம் தேதி அன்று புகார் அளிக்கப்பட்ட்து என்றும் மறுநாள் பிப்ரவரி 25 அன்றே மூன்று குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.