மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிந்து வரும் மகாபாரதி, போக்சோ சட்டம் குறித்த அரங்கக் கூட்டத்தில் பேசியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பாலின வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவரும் மூன்றரை வயது சிறுமி காரணம் என்று அவர் குறிப்பிட்டது, சமூக ஊடகங்களில் கடுமையான எதிர்வினைகளை ஏற்படுத்தி இருந்தது.
அவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் வலைவாசிகள் கடுமையாக கருத்துகளை முன் வைத்தனர்.
இந்த நிலையில் அவரை அந்தப் பதவியில் இருந்து மாற்றி ஈரோடு மாநகராட்சி ஆணையர் ஸ்ரீகாந்தை மயிலாடுதுறை ஆட்சியராக அரசு நியமித்துள்ளது.
மகாபாரதி காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தலைமைச் செயலாளர் முருகானந்தம் இதற்கான உத்தரவை இன்று மாலையில் வெளியிட்டார்.