செய்திகள்

அன்புமணி பார்த்தார்... அப்புறமா சொல்றேன் - இராமதாஸ்

Staff Writer

பா.ம.க. நிறுவனர் இராமதாசுக்கும் அவரின் மகன் அன்புமணிக்கும் இடையே புகைச்சல் ஏற்பட்டு பகிரங்கமாக வெடித்தது. அதையடுத்து இராமதாசை தைலாபுரம் தோட்டத்தில் அன்புமணி நேற்று சந்தித்துப் பேசினார். ஆனால், சந்திப்பு விவரம் வெளியிடப்படவில்லை. 

இந்நிலையில் இன்று சென்னைக்குப் புறப்படுவதற்காக தைலாபுரம் வீட்டிலிருந்து வெளியே வந்த இராமதாசிடம், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, தன்னை அன்புமணி வந்து சந்தித்ததாக அவர் தெரிவித்தார். ஆனால் மேற்கொண்டு எதையும் கூறாமல், ”அப்புறம் வந்து சொல்கிறேன்” எனக் கூறிவிட்டு நகர்ந்தார். 

முன்னதாக, அவரிடம் ஒரு செய்தியாளர் மருத்துவமனைக்குச் செல்கிறீர்களா எனக் கேட்டதற்கு, “மருத்துவப் பரிசோதனைக்காகச் செல்லவில்லை. ஐ ஆம் ஆல்ரைட்.” என்றார்.

குருமூர்த்தி வந்தாரே எனக் கேட்டதற்கு, “ பேசிட்டிருக்காங்க. அவரை நான் ரொம்ப நல்லா மதிக்கிறவன். எங்களோட நட்பு நீண்ட நாள் நட்பு. அதேமாதிரி சைதை துரைசாமி... 30 வருசமா பழக்கம்..” என்றவர், அன்புமணியைப் பற்றிக் கேட்டதும், சுருக்கமாகப் பேசிவிட்டு முடித்துக்கொண்டார்.