அமித் ஷா 
செய்திகள்

அமித்ஷா வருகையைக் கண்டித்து கருப்புக் கொடி போராட்டம்!

Staff Writer

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 25ஆம் தேதி கோவைக்கு வருகிறார். அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


திராவிடர் கழகம் துணைத் தலைவர், 
கலி.பூங்குன்றன் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம்:  

” கோவைக்கு 25.2.2025 அன்று வருகை தரவிருக்கும் - மாநில உரிமைகளைப் பறிக்கும் - அரசமைப்புச் சட்டத்தில் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள மதச்சார்பின்மை, சமூக நீதிக்கு எதிராகச் செயல்படும் - மாநில அரசுக்கு அளிக்க வேண்டிய உரிமைத் தொகைகளைத் தரமறுக்கும் - தேசிய கல்வி என்ற பெயராலே இந்தியைத் திணிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு - தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்புணர்வையும், உரிமைக் குரலையும் வெளிப்படுத்தும் வண்ணம்  கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

திராவிடர் கழகம் உட்பட்ட பெரியாரிய கூட்டமைப்புகள், இடது சாரிகள் அமைப்புகள் என 21 அமைப்புகள் இந்தக் கருப்புக் கொடி அறவழி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கின்றன.


கோவை, மேட்டுப்பாளையம், கோபிச்செட்டிபாளையம், திருப்பூர், தாராபுரம், பொள்ளாச்சி தி.க.   மாவட்டங்களைச் சேர்ந்த அமைப்பினர் பெருமளவில் பங்கேற்கவேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.” என்று திராவிடர் கழகச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.