அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட மது வகைகளுக்கு கனடா நாட்டின் பிரிட்டீஷ் கொலம்பியா மாநிலத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசின் மதுபான வழங்கல் குழுவுக்கு இதுகுறித்து அந்த மாநில முதலமைச்சர் டேவிட் எபி உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, டொனால்டு டிரம்பின் குடியரசுக் கட்சி ஆளும் அமெரிக்கா மாநிலங்களில் தயாரிக்கப்படும் மது வகைகளுக்கு பிரிட்டிஷ் கொலம்பியா தடை விதித்தது. இப்போது, ஒட்டுமொத்தமாக அமெரிக்காவில் தயாரிக்கப்படும் அனைத்து மது வகைகளையும் அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் 200 மதுக் கடைகளில் இது நடைமுறைக்கு வரும்.
பதிலாக பிரிட்டிஷ் கொலம்பியா தயாரிப்பு மதுவகைகளைப் பயன்படுத்துமாறு எபி கேட்டுக்கொண்டுள்ளார்.