சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் எனக்கூறி அமெரிக்காவிலிருந்து அனுப்பப்பட்டவர்களுக்கு விலங்கு பூட்டப்பட்ட விவகாரம் நாடாளுமன்றத்தில் இன்று எதிரொலித்தது.
நாடாளுமன்ற மக்களவை இன்று காலையில் கூடியதும் எதிர்க்கட்சியினர் இந்தப் பிரச்னையைக் கிளப்பினர். சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் இதற்குப் பதில் அளிக்கவேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.
தொடர்ந்து அவர்கள் முழக்கமிட்டபடியே இருந்தனர். வேறு பல கோரிக்கைகளையும் உறுப்பினர்கள் எழுப்பினர்.
மாநிலங்களவையிலும் இப்பிரச்னை எழுப்பப்பட்டது.
அங்கும் உறுப்பினர்களின் முழக்கத்தால் அமளி ஏற்பட்டது.
தொடர் அமளியால் இரு அவைகளும் மதியம் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டன.