துரை வைகோ 
செய்திகள்

அமைச்சர் அன்பில் மகேசுக்கு துரை வைகோ கடிதம்.. ஏன்?

Staff Writer

ம.தி.மு.க.வின் அதிகாரபூர்வ வார இதழான சங்கொலியை அரசு நூலகங்களில் வாங்குவதற்கு அரசாணை பிறப்பிக்குமாறு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே வைகோ கேட்டுள்ளார். அது இன்னும் நிறைவேறாததால் அவரின் மகனும் ம.தி.மு.க. முதன்மைச் செயலாளருமான துரை வைகோ‌ பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். 

அதன் விவரம்:

” மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வார ஏடு சங்கொலி 30 ஆண்டுகளாக வெளி வந்து கொண்டிருக்கிறது.

திராவிட இயக்கத்தின் வாளும் கேடயமாக விளங்கும் இன்னொரு ஏடு "சங்கொலி"ஆகும்.

இவ்விதழை தமிழ்நாடு முழுவதும் உள்ள பொது நூலகங்களில் இடம் பெற செய்வதற்கு முதல்வர் அவர்களுக்கு தலைவர் வைகோ அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கடிதம் தந்தார்கள். நானும் இதே கோரிக்கையை வலியுறுத்தி தங்களை நேரில் சந்தித்து கடிதம் தந்தேன். சமீபத்தில் முதல்வர் அவர்களையும் நேரில் சந்தித்து இது குறித்து வலியுறுத்தினேன். முதல்வர் அவர்கள் ஆவன செய்வதாக கூறினார்கள்.

தற்போது மீண்டும் பொது நூலகத்துறை இயக்குனர் அலுவலகத்தில் இணையதளம் மூலமாக விண்ணப்பித்திருக்கிறோம்.

பொது நூலகத்துறை இயக்குனருக்கு பரிந்துரை அளித்து சங்கொலி வார ஏட்டை பொது நூலகங்களில் இடம் பெற உரிய அரசு ஆணை பிறப்பிக்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்று துரை கூறியுள்ளார்.