செய்திகள்

அமைச்சர் துரைமுருகனின் பதவி பறிப்பு, துறை மாற்றம்!

Staff Writer

தமிழக அமைச்சரவையில் இன்று திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

முதலமைச்சருக்கு அடுத்த நிலையில் உள்ள நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கவனித்துவரும் கனிமவளத் துறை, சட்டத்துறை அமைச்சர் இரகுபதிக்கு மாற்றப்பட்டுள்ளது. 

அவரிடமிருந்து சட்டத்துறை துரைமுருகனுக்கே மீண்டும் அளிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, துரைமுருகன் சட்டம், சிறைத் துறை ஆகியவற்றையும் கவனித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இனி, இரகுபதி கனிமவளத் துறை அமைச்சராகச் செயல்படுவார். 

முதலமைச்சர் ஸ்டாலின் பரிந்துரையின்படி ஆளுநர் இரவி இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.