திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து க. பொன்முடி விடுக்கப்படுவதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சைவ, வைணவ சமய நம்பிக்கைகளை உடலுறவுடன் ஒப்பிட்டு அமைச்சர் பொன்முடி பேசியிருந்தார். அவரின் இந்த பேச்சு சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ள நிலையில், ‘மூத்த அமைச்சர் இப்படியா பேசுவது’ என பலரும் கொந்தளித்துள்ளனர். அவரின் இந்த பேச்சுக்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்த அடுத்த ஒரு மணிநேரத்தில் பொன்முடியின் கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: “கழக துணைப் பொதுச்செயலாளர் க. பொன்முடி அவர் வகித்து வரும் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விடுக்கப்படுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.