செய்திகள்

இறந்துபோன இடத்தில் பிரபாகரனுக்கு வீரவணக்கம்!

Staff Writer

இலங்கையில் ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலைப் போரில் அரசை எதிர்த்துப் போர் நடத்திய புலிப் போராளிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மரணம் அடைந்தார். அவர் இன்னும் உயிருடன் இருப்பதாகவும் ஒரு தரப்பு கூறிவரும் நிலையில், புலம்பெயர்ந்து வாழும் பல நாடுகளில் பிரபாகரனுக்கு இறந்துபோனவர்களுக்கான வீரவணக்கம் செலுத்தவேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துவருகின்றனர். 

கடந்த ஆண்டு ஈழத்தமிழர் வசிக்கும் நாடுகளில் பிரபாகரனுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், இறுதிப் போர் முடிந்த- பிரபாகரன் இறந்துபோனதாகக் கூறப்படும் முல்லைத்தீவு மாவட்டம் நந்திக்கடல் பகுதியில் அவருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது. 

”பிரபாகரன் இறந்துபோன மே17ஆம் தேதியான இன்று அதிகாலையில் அவர் இறந்துபோன நந்திக்கடல் பகுதியில் அவருடைய படம் வைக்கப்பட்டு, அதற்கு நினைவுச்சுடர் ஏற்றி மக்கள் வீரவணக்கம் செலுத்தினர்.” என்று உள்ளூர் ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.