செய்திகள்

உயர்கல்விச் செயலாளர், விருதுநகர் ஆட்சியர்... ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்!

Staff Writer

உயர்கல்வித் துறையின் செயலாளர் சமயமூர்த்தி அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு, மனிதவளத் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதைப் போல அடிக்கடி பட்டாசு விபத்துகளில் உயிரிழப்புகள் தொடரக்கூடிய சூழல் நிலவும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனும் மாற்றப்பட்டு, தலைநகர் சென்னைக்குத் தூக்கியடிக்கப்பட்டுள்ளார்.  

இன்று ஒரே நாளில் 55 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.