அனுராதா மகேஷ்குமார் 
செய்திகள்

உறவு இருந்தது - நேற்று; தவறானதில்லை- இன்று : மகேஷ்குமார் மனைவி முரண்!

Staff Writer

காவல்துறை இணை ஆணையர் மகேஷ்குமார் மீது பாலியல் குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டதால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதையொட்டி அவரின் மனைவி அனுராதா நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, பாதிக்கப்பட்ட பெண் காவலருக்கும் தன் கணவருக்கும் ரிலேசன்ஷிப்(உறவு) இருந்துவருவதாகவும் அதன்பொருட்டே அவருக்கு மகேஷ்குமார் உதவிவருவதாகவும் அனுராதா கூறினார். 

ஆனால், இருவரையும் பல முறை தான் அதைக் கண்டித்துள்ளதாகக் கூறிய அனுராதா, இன்று மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்து, அப்படி எந்தத் தவறான உறவும் இருவருக்கும் இடையில் இல்லை என்றும் இதுபோலப் பல புகார்கள் பொய்யாகக் கூறப்படுவதாகவும் ஊடகங்கள் அவற்றைப் பரப்பவேண்டாம் என்றும் கையெடுத்துக் கேட்டுக்கொண்டார். 

இதில், நேற்றும் இன்றும் மாறிமாறி அவர் பேசியதைப் பற்றித் தெளிவுபடுத்துமாறு செய்தியாளர்கள் கேட்டதற்கு, நேற்று தன்னுடைய உணர்வுமயப்பட்ட நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் தான் அப்படி எதுவும் கூறவில்லை என்றும் மீண்டும் சொன்னார்.