செய்திகள்

கச்சத்தீவு திருவிழா- பக்தர்களுக்கு வேண்டுகோள்!

Staff Writer

இலங்கை வசம் உள்ள கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நேற்றுமுன்தினமும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

அதில் பேசிய மாவட்ட பதில் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் அனைத்து பக்தர்களும் ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“எங்களால் வழங்கப்படும் விண்ணப்பங்களை நிரப்பி கச்சத்தீவில் அவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். உணவு, தங்குமிட வசதிகள் கடற்படையினரால் செய்யப்பட்டுள்ளன. அந்தோணியார் தேவாலயத்தைச் சுற்றிலும் துப்புரவு செய்யப்பட்டுள்ளது. திருவிழாவுக்கு வருபவர்கள் ஏற்பாட்டாளர்களின் அறிவுறுத்தலின்படி நடந்துகொள்ள வேண்டும்.” என்றும் அவர் கூறினார்.

கச்சத்தீவு திருவிழா வரும் 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில், இரு நாடுகளிலிருந்தும் தலா 4 ஆயிரம் பேர், இரு நாடுகளின் அதிகாரிகள், பணியாளர்கள் ஆயிரம் பேர் என மொத்தம் 9 ஆயிரம் பேர் இதில் கலந்துகொள்கின்றனர்.