தமிழ்நாடு காவல்துறை 
செய்திகள்

கூடுதல் டி.ஜி.பி.கள், உதவி ஐ.ஜி.கள் மாற்றம்!

Staff Writer

தமிழக காவல்துறையின் கூடுதல் தலைமை இயக்குநர் நிலையில் உள்ள ஆயுஷ் மணி திவாரி, மாநில குற்ற ஆவணக் காப்பகத்தின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். 

தற்போது அந்த இடத்தில் உள்ள எச்.எம். ஜெயராம் ஆயுதப்படையின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்தப் பதவி டி.ஜி.பி. நிலை அதிகாரியால் நிருவாகம் செய்யப்பட்டது, இவருடைய நியமனத்தின் மூலம் நிலை இறக்கம் செய்யப்பட்டுள்ளது. 

இவர்களுடன் 2 உதவி ஐ.ஜி.கள் உட்பட 9 காவல் மாவட்ட நிலை அதிகாரிகள், பயிற்சியை முடித்துவிட்டு உதவிக் கண்காணிப்பாளராகப் பணியாற்றிவரும் புதிய ஐபிஎஸ் அதிகாரிகள் 4 பேர் பணி உயர்வுடன் இடமாற்றமும் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான ஆணையை உள்துறைச் செயலாளர் தீரஜ்குமார் பிறப்பித்துள்ளார்.