செய்திகள்

சண்டை நிறுத்தம்- இந்தியா, பாகி. அரசுகள் ஒப்புதல்!

Staff Writer

இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் இடையே கடந்த நான்கு நாள்களாக நீடித்துவந்த ஆயுத மோதல் இன்று தற்காலிக முடிவுக்கு வந்துள்ளது.  

அமெரிக்காவின் முயற்சியால் நேற்று இரவு முழுவதும் சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்று முடிவு எட்டப்பட்டதாக அந்நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

அவர் தன் சமூக ஊடகப் பக்கத்தில் முதலில் இத்தகவலை வெளியிட்டார். ” இரண்டு நாடுகளும் பொது அறிவையும் நுண்ணறிவையும் பயன்படுத்தி இம்முடிவுக்கு வந்துள்ளன. இரு தரப்புக்கும் பாராட்டுகள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.