சத்யராஜின் மகள் திவ்யா தி.மு.க.வில் இணைந்தபோது! 
செய்திகள்

சத்யராஜ் மகளுக்கு தி.மு.க.வில் பதவி!

Staff Writer

தி.மு.க.வில் அண்மையில் இணைந்த நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து வல்லுநருமான திவ்யா சத்யராஜுக்கு அக்கட்சியின் ஐடி அணியில் பதவி அளிக்கப்பட்டுள்ளது. 

இவருடன் பி.எம்.சிறீதர், பா.ச. பிரபு ஆகியோர் ஐடி அணியின் மாநிலத் துணைச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இதை அறிவித்துள்ளார். 

அண்மையில் நெல்லை மாவட்டப் பொறுப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட மைதீன்கானுக்கு, மாநில சிறுபான்மையினர் நலக் குழுத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.