மத்திய கல்வி வாரியம்- சிபிஎஸ்இ திட்டத்தில் படிக்கும் மாணவர்களில் பத்தாம் வகுப்புக்கு நாளை பொதுத்தேர்வு தொடங்குகிறது. இதற்காக நாடு முழுவதும் மாணவர்கள் தயாராக இருக்கும் நிலையில், தஞ்சாவூரில் உள்ள ஒரு பள்ளி மாணவர்களுக்கு ஒரு தகவல் இடியென இறங்கியுள்ளது.
அந்தப் பள்ளிக்கு இதுவரை சிபிஎஸ்இ அங்கீகாரமே பெறப்படவில்லை என்பதுதான் அது.
மாவட்டத்தில் உள்ள அதிராம்பட்டினம் பிரைம் எனும் அந்தப் பள்ளியில் 8ஆம் வகுப்புக்கே அங்கீகாரம் பெறவில்லை எனும் அதிர்ச்சியான தகவலும் தெரியவந்துள்ளது.
பத்தாம் வகுப்புக்கு 19 மாணவர்கள் படித்துதேர்வு எழுதத் தயாராக இருந்தநிலையில், தேர்வுக்கூடச் சீட்டு வழங்கப்படவில்லை.
தகவலறிந்த மாணவர்களின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரை அணுகியுள்ளனர்.