செய்திகள்

சென்னைக்கு வந்த அமித்ஷா- அண்ணாமலை வரவேற்பு!

Staff Writer

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தில்லியிலிருந்து இன்று மாலை சென்னைக்கு வந்தார். இரவு 7.45 மணியளவில் சென்னை விமானநிலையத்துக்கு வந்த அவரை மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வரவேற்றார். 

குடியரசு முன்னாள் துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவின் பேரன் திருமணம், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக அமித்ஷா சென்னைக்கு வந்துள்ளார். விமானநிலையத்திலிருந்து கிளம்பிய அவர், மாமல்லபுரம் தனியார் தங்கும் விடுதிக்குச் சென்றார்.

திருமண நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் இன்று இரவே அவர் தில்லிக்குச் செல்வார் என்று பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

அவருடன் குடியரசுத் துணைத்தலைவர் ஜெகதீப் தங்கரும் கோவளம், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கான மையத்தின் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு, திருமணத்திலும் பங்கேற்கிறார். 

இவர்கள் இருவரின் வருகையை முன்னிட்டு விமானநிலைய வட்டாரம், கிழக்குக் கடற்கரை சாலை, தாம்பரம் ரேடியல் சாலை உட்பட பல பகுதிகள் கடும் நெரிசலைச் சந்தித்தது. 

முன்னதாக, மாற்றுப் பாதைகளில் செல்லுமாறு காவல்துறை அறிவித்திருந்தது.