தலைநகர் சென்னையில் அணிகலன் தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக இன்றும் அதிகரித்துள்ளது.
ஏற்றத்தில் உள்ள தங்கத்தின் விலை கடந்த இரு நாள்களில் மட்டும் 2,680 ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது.
அணிகலன் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 1,200 ரூபாய் அதிகரித்தது.
ஒரு பவுன் தங்கம் 68 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
ஒரு கிராம் தங்கத்தின் விலை 150 ரூபாய் உயர்ந்து, 8,560 ரூபாயாக அதிகரித்துள்ளது.