கணிசமானவர்களின் நம்பிக்கையாக உள்ள அக்சய திருதியை நாளை முன்னிட்டு தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. இடையில் திடீரென சரிந்தாலும் தங்கத்தின் விலையேற்றத்தில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை.
கடந்த வாரத்தில் வரலாற்றில் இல்லாதபடி 70 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக சவரன் விலை உயர்ந்தது.
அதைத்தொடர்ந்து சென்னை தங்கச் சந்தையில் அணிகலன் தங்கம் இன்று சவரனுக்கு 840 ரூபாய் அளவுக்கு அதிகரித்து, 71,360 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
ஒரு கிராம் தங்கத்தின் விலை 105 ரூபாய் அதிகரித்து, 8,920 ரூபாயாக உயர்ந்துள்ளது.