கொரோனாவால் இறந்தவர்கள் என முன்னர் தெரிவிக்கப்பட்ட எண்ணிக்கைக்கும் புதிய தகவலின் எண்ணிக்கைக்கும் சுமார் 20 லட்சம் அளவுக்கு வித்தியாசம் இருக்கிறது என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டிலும் 1.3 இலட்சம் அளவுக்கு உயிரிழப்பு குறைத்துக் காட்டப்பட்டுள்ளதாகப் பிரச்னை எழுந்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வி.சி.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் இரவிக்குமார், தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
”அப்போதே இதை உலக சுகாதார நிறுவனமும் ருக்மினி உள்ளிட்ட புள்ளியியல் ஆய்வாளர்களும் தெரிவித்தனர். ஆனால் அதை மோடி அரசு மறுத்தது. அவர்களுக்கு உள்நோக்கம் கற்பித்தது. இப்போது உண்மை வெளிவந்திருக்கிறது.
இந்திய அளவில் மட்டுமல்ல தமிழ்நாடு அளவிலும் இந்த வித்தியாசம் உள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் மரணங்கள் குறைத்துக் காட்டப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. இது எப்படி நடந்தது என்பதைத் தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை விளக்க வேண்டும்.” என்று இரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.