தமிழச்சி தங்கபாண்டியன் 
செய்திகள்

தமிழச்சி தலைமையில் தி.மு.க. கல்வியாளர் அணி!

Staff Writer

தி.மு.க.வில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கல்வியாளர் அணியில் தென்சென்னை மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தலைவராக புலவர் செந்தலை கவுதமன் அறிவிக்கப்பட்டுள்ளார். 

புலவர் கவுதமன், கோவை, சூலூரில் பாவேந்தர் பேரவை எனும் அமைப்பின் மூலம் பாரதிதாசன், திராவிடர் இயக்கம் பற்றிய கருத்துப்பரப்பலைச் செய்துவருகிறார். 

ஏராளமான கூட்டங்களில் பேசியும் இதழ்கள், நூல்கள் என எழுதியபடியும் ஓய்வுக்குப் பின்னரும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். 

தி.மு.க.வில் இணைந்து செயல்பட்டுவரும் தமிழச்சி, முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் மகள் என்பதுடன், அரசுக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றியவர். இவர் கடைசியாக சென்னை, இராணி மேரி கல்லூரியில் பணியாற்றி ஓய்வுபெற்றார்.