கமல் கூறியதில் எந்தத் தவறும் இல்லை என தமிழக அரசின் சார்பில் முதன்முதலில் அமைச்சர் ஒருவர் பேசியுள்ளார்.
திருச்சியை அடுத்த எடமலைப்பட்டியில் பள்ளிக் கட்டடத் திறப்பு விழாவில் இன்று அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஸ் கலந்துகொண்டனர்.
அங்கு நேருவிடம், செய்தியாளர்கள் கமல் விவகாரம் குறித்து கேட்டனர்.
கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழிசை சொல்லியிருக்கிறாரே என்றதற்குப் பதிலளித்த அமைச்சர் நேரு, “அவங்க சொல்வாங்க.. யாரும் அதை விரும்பல”... என்றார்.
“அவர் சொன்னதுல என்ன தப்பு இருக்கு. இந்த மொழியிலயிருந்துதானே தமிழில் இருந்துதான எல்லாமே தெலுங்கு, மலையாளம், க... எல்லாமே வந்தது. ஏதோ நீதிபதி வேணும்னு அவரு சொல்லியிருக்கிறாங்க. அதப் பத்தி அவங்க பேசிகிட்டிருக்காங்க.” என்றும் அமைச்சர் நேரு கூறினார்.