தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் இன்று மாலையில் பதவியேற்றுக்கொண்டார்.
சென்னை, வானகரம் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் முறைப்படி பதவியேற்றார்.
இதற்கான சான்றிதழை கட்சியின் மேலிடப் பிரதிநிதிகள் கிசன், தருண் சுக் ஆகியோர் அவரிடம் வழங்கினர்.
தலைவராக இருந்த அண்ணாமலைக்கு கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி கிடைத்துள்ளது.
அவருடன் மத்திய அமைச்சர் எல்.முருகன், முன்னாள் ஆளுநர் தமிழிசை, எச்.இராஜா, பொன்.இராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், கரு. நாகராஜன், நடிகர் சரத்குமார், சசிகலா புஷ்பா, ஏ.ஜி. சம்பத், பால் கனகராஜ், வினோத் செல்வம் ஆகியோரும் பா.ஜ.க. பொதுக்குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என அறிவிக்கப்பட்டது.