தங்கம் விலை (மாதிரிப்படம்) 
செய்திகள்

தாறுமாறாக ஏறும் தங்கம் விலை... இன்று ஒரே நாளில் இரண்டு முறை உயர்வு!

Staff Writer

தங்கம் விலை இன்று ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகின்றது. சமீப வாரங்களில் தங்கம் விலை 72 ஆயிரத்தைத் தாண்டியது மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்தவகையில், வாரத்தின் முதல் நாளான இன்று காலை நிலவரப்படி சென்னையில் கிராம் ஒன்றுக்கு ரூ. 30 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 8,950-க்கும், ஒரு சவரன் ரூ. 240 உயர்ந்து ரூ. 71,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ஆனால், மாலையில் வர்த்தகம் நிறைவுபெறும்போது தங்கத்தின் விலை மேலும் உயர்ந்துள்ளது. ஒரேநாளில் இரண்டாவது முறை தங்கம் விலையுயர்ந்துள்ளது.

அதன்படி, இன்று மட்டும் தங்கம் விலை, ரூ. 1,120 உயர்ந்து ரூ.72,480-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ. 110 உயர்ந்து ரூ. 9,060-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேசமயம் வெள்ளி விலை மாற்ற இல்லாமல் ஒரு கிராம் ரூ.111-க்கும், ஒரு கிலோ ரூ.1,11,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து கிராம் ஒன்று 9 ஆயிரத்தைத் தாண்டியிருப்பது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.