செய்திகள்

தி.மு.க. பிரச்சாரத்துக்கு முழக்கம் தயார்- பொதுக்குழுவில் தீர்மானம்!

Staff Writer

தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னையில் அக்கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

இதில், காஷ்மீரில் கொல்லப்பட்டவர்களுக்காக இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

”முற்போக்கான சிந்தனைகளுடன் கடமையாற்றிய கத்தோலிக்கத் திருச்சபைத் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவு” என்று குறிப்பிட்டும் இந்தக் கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. 

நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் பல்லாண்டு எனும் பெயரில் மாநிலம் முழுவதும் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடத்துவது என்றும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.  

”தி.மு.க.வின் இந்தச் சாதனைகளைப் பகுதி, ஒன்றிய, நகர அளவில், இளைஞர் அணியின் மூலம் வரப்பெற்ற 186 இளம் பேச்சாளர்கள் உள்ளிட்ட 443 பேச்சாளர்களின் பங்கேற்புடன், 868 ஒன்றியங்கள் - 224 பகுதிகள் - 152 நகரங்கள் என மொத்தம் 1,244 இடங்களில் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும்.” என்று அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இது மக்களிடம் எடுபட்டால் இதை மையப்படுத்தியே தேர்தல் பிரச்சாரமாகவும் எடுத்துச்செல்லப்பட வாய்ப்புண்டு என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.