சிங்கப்பூரில் தீ விபத்தில் சிக்கிய ஆந்திர துணைமுதலமைச்சர் பவன் கல்யாணின் மகன் நலமானதை அடுத்து, அவரை நேற்று பவன் கல்யாணும் அவரின் மனைவியும் அழைத்துவந்தனர்.
விமான நிலையத்தில் நகரும் படிக்கட்டுகளில் பவன் கல்யாண் தன் மகனை அணைத்தபடி தூக்கிவந்த காட்சி சமூக ஊடகங்களில் பரவி, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மகன் படித்த பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, பவன் சிங்கப்பூருக்கு விரைந்தார். அங்கு அவரின் மகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதில் நலமடைந்தார்.
அதைத் தொடர்ந்து மகனை பெற்றோர் அழைத்துவந்தனர்.
பவனின் மனைவியான அன்னா லெஷ்னேவா தன் மகன் நலமடைந்ததை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மொட்டையடித்து தன் வேண்டுதலை நிறைவேற்றினார்.
இந்தக் காட்சிகளும் சமூக ஊடகத்தில் தீயாய்ப் பரவிவருகின்றன.