ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரைவைகோ அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
இது, அக்கட்சிக்குள் நிலவிவந்த உட்பூசலுக்கு முடிவுகட்டும்படியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
அண்மையில் ம.தி.மு.க. தலைமையகமான தாயகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில், மல்லை சத்யா முதலிய நிர்வாகிகளுக்கும் துரைவைகோவுக்கும் கருத்து மாறுபாடு ஏற்பட்டது. நேரடியாக அவர்கள் மாறுபட்ட கருத்துகளை வெளிப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அக்கூட்டத்திலிருந்து துரை வெளிநடப்பு செய்தார்.
நாளை ம.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், முன்னதாக திருச்சியில் ஒரு கூட்டத்தில் மல்லை சத்யாவைக் கட்சியைவிட்டு நீக்குவதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிலிருந்தே சத்யாவுக்கு எதிராகப் பிரச்னை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.