நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் குற்றச்சாட்டில் இன்று கைதுசெய்யப்பட்டார்.
கொக்கைன் எனும் போதைப்பொருளை அவர் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. 40 முறை அவர் போதைப்பொருள் வாங்கினார் என்று தகவல் வெளியானது.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் கேளிக்கை விடுதி மோதல் வழக்கில் கைதான பிரதீப் என்பவர் அளித்த வாக்குமூலத்தில் இப்படியொரு தகவலைக் கூறியதும் பரபரப்பு ஏற்பட்டது.
ஒரு கிராம் போதைப்பொருளை 12 ஆயிரம் ரூபாய் கொடுத்து ஸ்ரீகாந்த் வாங்கியதாகவும் அவர் வாக்குமூலத்தில் குறிப்பிட்டார்.
அதையடுத்து, ஸ்ரீகாந்திடம் காவல்துறையினர் விசாரணையும் சோதனையும் நடத்தினர். அதில் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானது.
பணப்பரிமாற்றத்திலும் ரூ.4.72 இலட்சம் ரூபாய் தரப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
அதையடுத்து அவரைக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.