அண்ணா அறிவாலயம் 
செய்திகள்

நாளை மாலையில் தி.மு.க. எம்.எல்.ஏ.கள் கூட்டம்!

Staff Writer

தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நாளை மாலையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கைக் கூட்டம் நாளை தொடங்கவுள்ளது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு காலையில் வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல்செய்கிறார்.

நாளைமறுநாள் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தக் கூட்டத்தொடரில் தி.மு.க. உறுப்பினர்கள் எப்படிச் செயல்படுவது என்பது குறித்து, நாளை மாலையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என அரசு தலைமைக் கொறடா கா.இராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.

கட்சித் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் மாலை 6.30 மணிக்கு இக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.