முதல்வர் ஸ்டாலின் 
செய்திகள்

நாளை முக்கியமான ஒரு தகவல்- ஸ்டாலின் கிளப்பிய பரபரப்பு!

Staff Writer

தொல்லியல் துறை தொடர்பான நிகழ்வு ஒன்றில் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை சென்னையில் கலந்துகொள்கிறார். அதில் முக்கியமான தகவல் ஒன்றை வெளியிடவுள்ளதாக திடீர் பரபரப்பை அவரே கிளப்பியுள்ளார்.

நிதி -தொல்லியல்துறை அமைச்சர்
தங்கம் தென்னரசு இன்று வெளியிட்டுள்ள  ஒரு சமூகஊடகப் பதிவில் “இந்தியத் துணைக் கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும் 'இரும்பின் தொன்மை' எனும் நூலை வெளியிட்டு கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் கீழடி இணையதளத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கும் நிகழ்வு 23.01.2025 அன்று காலை 10 மணி அளவில் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடை பெற உள்ளது. அனைவரும் வருக” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதை முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் தன் சமூக ஊடகப் பக்கங்களில் இணைத்து -

”நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது!

வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள்! மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும்!” 

என்று பதிவிட்டுள்ளார்.