காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப. சிதம்பரம் குஜராத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் திடீரென மயங்கி விழுந்தார்.
அகமதாபாத்தில் உள்ள காந்தி ஆசிரமத்தில் பேசிக்கொண்டிருந்தபோதுதான் இந்த சம்பவம் நிகழ்ந்தது. உடனிருந்த கட்சிக்காரர்கள் விரைந்து செயல்பட்டு அவசர ஊர்தியில் அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்.
தனியார் மருத்துவமனையில் சிதம்பரத்துக்கு முதல்கட்டச் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் கால் மணி நேரத்துக்கு முன்னர் அவரின் மகனும் மக்களவை உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம், அதிக வெயிலாலும் நீர்ச்சத்துக்குறைவு காரணமாகவும் சிதம்பரம் மயங்கிவிட்டதாகவும் அகமதாபாத் சைடஸ் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டு, தற்போது இயல்புநிலையில் இருப்பதாகவும் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தன் சமூக ஊடகப் பக்கங்களில் தெரிவித்துள்ளார்.